Breaking News

நட்சத்திர ஹோட்டல்களில் தடுப்பூசி செலுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஸ்டார் ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவனைகள்  தடுப்பூசி போடுவது அரசு  நெறிமுறைகளுக்கு எதிரானது என்று மத்திய சுகாதார துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. த நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே நிரந்தர தீர்வு தடுப்பூசி என்பதால் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி  அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், அரசு ஊழியர்களுக்கு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களில் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் விதிமுறைகளுக்கு மாறாக சில நட்சத்திர ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள்  தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

காலை உணவுடன் சேர்த்து 2 மணி நேரம் ஓய்வுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இதற்கு கட்டணமாக 3000 முதல் 10000 வரை வசூலிக்கப்படுகிறது.

The federal government has warned that action will be taken if vaccinated in star hotelsஇது தொடர்பாக மாநிலங்களுக்கு  மத்திய சுகாதார துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், “அரசின் விதிமுறைகளுக்கு மாறாக நட்சத்திர ஓட்டல்களுடன் இணைந்து தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட வேண்டும். விதிமுறைகளை மீறும் நட்சத்திர ஓட்டல்கள், தனியார் மருத்துவமனைகள்  மீது சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் அரசின் வழிகாட்டுதல்படி கொரோனா தடுப்பூசி போடும் பணி செயல்படுத்தப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது

மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் போது தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் எங்கிருந்து தடுப்பூசி கிடைக்கிறது என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

Link Source: https://bit.ly/3c3hHKS