Breaking News

குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள டைனோசர் பூங்கா கொரோனா காலத்தில் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

The dinosaur park in the Queensland area has been popular among the people during the Corona period

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் விண்டோன், மட்டபுர்ர, ரிச்மண்ட போன்ற பகுதிகளில் வரலாற்று காலத்திற்கு முந்தை டைனோசர்கள் வாழ்ந்திருக்கலாம் என்று கருத்தப்படுகிறது. இப்பகுதியில் காணப்படும் டைனோசர்களின் காலடி படிமங்களும், அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளும் இங்கு டைனோசர்கள் வாழ்ந்ததை உறுதி செய்கின்றன.

இவை பெரும்பாலும் தாவரத்தை உண்டு வாழும் கூப்பர் என்று அழைக்கப்படும் டைனோசரும் அடங்கும்.

The dinosaur park in the Queensland area has been popular among the people during the Corona period,100 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்கள் படிமங்களும், எழும்புகளும் இப்பகுதியில் கண்டெடுக்கப்படுவது இந்த இடம் குறித்த முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த EROMANGA தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் Roby Mackenzie, இப்பகுதியில் காணப்படும் மிகப்பெரிய டைனோசர்கள் இதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் மட்டுமே கண்டெடுக்கபட்டதாக குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாகவே இந்த இடத்தின் முக்கியத்துவம் அதிகரித்திருப்பதாக கூறுகிறார்.

The dinosaur park in the Queensland area has been popular among the people during the Corona period.60 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் டைனோசர்கள் எலும்புகளை கண்டெடுத்த Doug, இது குறித்து கூறிய போது தான் இதனை நம்ப மறுத்ததாகவும், ஆனால் இப்போது இது மக்களிடையே வரவேற்பை பெறுவது மகிழ்ச்சியளிப்பதாக அவரின் மனைவி Pearl Langdon தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை 200% விழுக்காடு அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய டைனோசர்கள் மாதிரிகள் முன்பு மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் போது அவர்களிடம் மகிழ்ச்சியை காணமுடிவதாகவும் தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் சுற்றுலா வருவாயில் இதன் பங்களிப்பு 25% இருப்பதாகவும் இதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

Link Source: https://ab.co/3w8IBsi