Breaking News

டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களால் பூங்காக்களை தகன மேடைகளாக மாற்ற டெல்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

The Delhi government is taking steps to turn parks into crematoriums due to the rising corona deaths in Delhi.

இந்திய தலைநகர் டெல்லி, கொரோனாவின் இரண்டாம் அலைவீச்சில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது.

கொரோனா மரணங்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 3601 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமார் 2100 க்கும் மேற்பட்டோர் உயிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் 57 பேரும், மார்ச் மாதத்தில் 117 பேருக்கு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், இரண்டாம் அலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.

The Delhi government is taking steps to turn parks into crematoriums due to the rising corona deaths in Delhiடெல்லியில் கொரோனா மரணங்கள் அதிகரித்திருப்பதால் , உடலை எரியூட்ட 16 முதல் 20 மணி நேரங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இரவும் பகலும் உடல்கள் தொடர்ந்து எரியூட்டப்பட்டு வருகிறது. இது குறித்து உடல்களை எடுத்து செல்லும் வாகன உரிமையளர் வினிதா விடம் பேசிய போது , இது போன்ற ஒரு இக்கட்டான நிலையை தான் காண்டதில்லை என்றும், உடலை எரியூட்ட மயானங்களில் போதிய இடமில்லாததால் உறவினர்கள் உடலுடன் டெல்லியில் திண்டாடுவதாக வேதனையுடன் தெரிவிக்கிறார்.

கொரோனாவால் உயிரிழப்பவர்களை மாநகராட்சி நிர்வாகம் ஆம்புலன்ஸ் மூலமாக மயானங்களுக்கு கொண்டுவந்து பாதுகாப்பாக எரியூட்ட வேண்டும், ஆனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதால் ஆம்புலன்ஸ் சேவை வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால உறவினர்களே உடல்களை சொந்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மயானத்துக்கு வருவதால் தொற்று பரவல் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Link Source: https://bit.ly/3aQmoau