Breaking News

மியாமி அடுக்குமாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. பராகுவே அதிபரின் உறவினர் ஒருவரும் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The death toll from the Miami apartment building crash has risen to 79. A relative of the Paraguayan president has been reported dead in the crash.

புளோரிடா மியாமியில் கடற்கரையோரம் அமைந்திருந்த அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் 16 வது நாளாக மீட்பு படையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த மியாமி நகர மேயர் Daniella Levine Cava, காணாமல் போனவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 79 பேர் உயிரிழந்திருப்பது, கடும் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

The death toll from the Miami apartment building crash has risen to 79. A relative of the Paraguayan president has been reported dead in the crash,..மேலும் கடந்த 16 நாட்களாக இரவு பகல் பாராமல் மீட்பு 24 மணி நேரமும் மீட்பு படையினர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் மேயர் டேனியலா குறிப்பிட்டுள்ளார். சிதிலமடைந்த கட்டுமானங்களுக்கிடையே ஆபத்தான வகையில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு படையினர் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது கடுமையான பாதிப்பையும், மனச்சோர்வையும் ஏற்படுத்துவதாக இருந்தாலும் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாகவும் Daniella Levine Cava உறுதியளித்துள்ளார்.

The death toll from the Miami apartment building crash has risen to 79. A relative of the Paraguayan president has been reported dead in the crash,.ஜூன் 24 ஆம் தேதி விபத்து நடைபெற்ற நிலையில், கடந்த 16 நாட்களாக யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை என்று மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சாம்பிளின் கட்டத்தின் புதையுண்ட பகுதிகளில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதை கண்டறியும் முயற்சியிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

கட்டடத்தின் அடிதளம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உயிரிழந்த நிலையில் சிலரின் சடலங்கள் கண்டறியப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

The death toll from the Miami apartment building crash has risen to 79. A relative of the Paraguayan president has been reported dead in the crashஉயிரிழந்தவர்களில், பராகுவே நாட்டின் அதிபர் மனைவின் சகோதரியும் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டுக்கான வெளியுறவுத்துறை அதிகாரி கூறியுள்ளார். கட்டட விபத்தில் தங்கள் வீடுகளை இழந்தவர்களுக்கு தேவையான உதவிகளை மாகாண அரசு செய்யும் என்று அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் 6 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3e9wF2S