Breaking News

ஃபிலைப்பைன்ஸ் நாட்டில் வீசிய சூறாவளி புயலில் சிக்கி இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The death toll from a typhoon in the Philippines has risen to 375, and the death toll is expected to rise.

கடந்த இரண்டு நாட்களாக ஃபிலிபைன்ஸின் தென் பகுதிகளில் ராய் புயல் பலமாக வீசியது. புயலை தொடர்ந்து கனமழையும் பெய்ய தொடங்கியது. மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசிய இந்த புயலால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர்.

The death toll from a typhoon in the Philippines has risen to 375, and the death toll is expected to rise..தற்போது பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய அந்நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் டெஃப்லின் லொரன்சானா, புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணியினரை அனுப்பி வருகிறோம் என்றார். ராய் புயலில் சிக்கி இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளனர். 500 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். 56 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இந்நிலையில் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அந்நாட்டின் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

புயல் பாதித்த இடங்களை பார்வையிட சென்ற ஃப்லிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ராட்ரிகோ டூதேர்தே, முதற்கட்டமாக 2 பில்லியன் பெசோஸ் (40 மில்லின டாலர்கள்) நிவாரணமாக அறிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3mpdTsu