Breaking News

சீனாவில் நகரத்தில் மூன்றடுக்கு ஹோட்டல் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஷோசூ நகரத்தில் சிஜி கையூன் என்ற தங்கும் விடுதி 2018 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. மூன்றடுக்கு கொண்ட இந்த விடுதி 54 அறைகளுடன் இயங்கி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு இடிந்து விழுந்த இந்த கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக 600க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 120க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

The death toll from a hotel collapse in a city in China has risen to 17,சுஜி கையூன் ஹோட்டலில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்களில் இடிபாடுகளில் இருந்து சுமார் 23 பேர் மீட்கப்பட்டதாகவும். இறுதியாக மீட்கப்பட்ட 6 பேரில், 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு லேசான காயமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேன் மற்றும் மோப்பநாய் உதவியுடன் இடிபாடுகளுக்குள் யாரேனும் சிக்கி உள்ளார்களா என்று 36 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற மீட்பு பணி புதன்கிழமையுடன் நிறைவுற்றதாக மீட்பு பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

விடுதிகள் பணிபுரிந்த மேலாளரும், மற்ற முக்கிய அதிகாரிகளும் காவல் துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

The death toll from a hotel collapse in a city in China has risen to 17.அவர்களிடம் கட்டடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் இந்த கட்டிடத்தின் கட்டுமான அனுமதியை மீறி ஏதானும் மாற்றங்கள் செய்யப்பட்டதா என்றும் விசாரணை செய்யப்பட்டு வருகறது. சீனாவில் குவான்ஷு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட கட்டட விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். கட்டட அனுமதியை மீறி கூடுதலாக சில தளங்களை கட்டியதால் விபத்து ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்மையில் சீனாவின் ஷென்ஜென் நகரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த அடுக்குமாடி கட்டடடத்தில் சில அதிர்வுகள் உணரப்பட்டதை தொடர்ந்து உடனடியாக அதில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3z10SJD