Breaking News

தேனீக்கள் கொட்டியதால் 63 ஆப்பிரிக்க பென்குயின்கள் உயிரிழந்தது வன உயிரின ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The death of 63 African penguins due to bee sting has come as a shock to wildlife enthusiasts.

கேப் டவுன் பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆப்பிரிக்க பென்குயின் வகைகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வகை பென்குயின்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், ஆப்பிரிக்க பென்குயின்களை அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

The death of 63 African penguins due to bee sting has come as a shock to wildlife enthusiasts..தென்னாப்பிரிக்க தேசிய பூங்காவின் கட்டுப்பாட்டில் வரும் இந்த பகுதியில் தேனீக்கள் கூட்டம் ஒன்று 63 பென்குயின்களை கொட்டியுள்ளது. இந்த தேனீக்கள் தேசிய பூங்காவினுள் வாழுக்கூடியது என்றும் இது மிக அசாதாரணமான நிகழ்வு என்று தேசிய பூங்காவின் மருத்துவர் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். தேனீக்கள் தாக்கியதால் 63 பென்குயின் பறவைகள் உயிரிழந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், பறவைகளை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The death of 63 African penguins due to bee sting has come as a shock to wildlife enthusiasts,குறிப்பாக பென்குயின்களின் கண் பகுதியில் ஏராளமான தேனீக்களின் கொட்டியதற்கான அடையாளம் உள்ளதாகவும், உயிரிழந்த பென்குயின்களின் உடல் அருகே தேனீக்களும் இறந்து கிடந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆப்பிரிக்க வகை பென்குயின்கள் 2035 ஆண்டு முழுமையாக அழியும் நிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே அச்சம் தெரிவித்திருப்பதால், இந்த வகை பென்குயின்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தேசிய பூங்கா நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Link Source: shorturl.at/jBOST