Breaking News

கொரோனா காரணமாக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து, இரண்டாண்டுகளுக்கு பிறகு சிட்னி துறைமுகத்தில் முதன்முறையாக க்ரூஸ் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

The cruise ship is anchored in Sydney Harbor for the first time in two years, following restrictions imposed due to the Corona.

வெளிநாட்டில் இருந்து ஆயிரக்கணக்கிலான பயணிகளுடன் வரும் க்ரூஸ் கப்பல்கள், ஆஸ்திரேலியாவின் கடல் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து, மீண்டும் பழைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.

The cruise ship is anchored in Sydney Harbor for the first time in two years, following restrictions imposed due to the Corona,மீண்டும் கடல் வழிப் போக்குவரத்து, சொகுசு கப்பல்கள் ஆஸ்திரேலியாவுக்குள் பிரவேசிப்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து சரியாக இரண்டாண்டுகளுக்கு பிறகு சிட்னி துறைமுகத்துக்கு புதியதாக பசிஃபிக் எக்ஸ்பிளோரர் என்கிற சொகுசு கப்பல் வந்துள்ளது. இன்று காலை 10.30 மணியளவில் சிட்னி துறைமுகத்துக்கு கப்பல் வந்தடைந்துள்ளது. சைப்ரல் கனவாய் வழியாக சுமார் 18 ஆயிரம் கி.மீ பயணம் செய்த இந்த கப்பல் ஆஸ்திரேலியாவுக்குள் வந்துள்ளது. மே 31-ம் தேதி பயணிகளுடன் பிரிஸ்பேனுக்கு கப்பல் செல்லும்.

இது கடல் பயணங்களை விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆசிய மற்றும் அமெரிக்க நாடுகளில் க்ரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு அதற்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து, கடல் வழிப் பயணங்கள் மீது மற்ற் உலக நாடுகள் கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.