Breaking News

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான கிரவுன் கேசினோ கேளிக்கை விடுதி $61 மில்லியன் செலுத்துவதற்கு முன்வந்துள்ளது.

The Crown Casino, which is facing tax evasion charges, has offered to pay $ 61 million.

விக்டோரியா மாகாணத்தில் இயங்கி வரும் கிரவுன் சூதாட்ட விடுதி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

2012 நிதியாண்டில் மட்டும் சுமார் 37 மில்லியன் டாலர் வரி செலுத்தாமல் இருந்ததாகவும், அதற்கு வட்டி மட்டும் 24 மில்லியன் டாலர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணயை ராயல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பின் முடிவுகள் வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிரவுன் கேசினோ சுமார் 480 மில்லியன் டாலர் வரை வரி ஏய்ப்பு செய்திருக்க வாய்ப்பிருப்பதாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராயல் கமிஷனிடம் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வரி ஏய்ப்பு தொடர்பாக சூதாட்ட நிறுவன செயல் அதிகாரியான சேவியர் வால்ஸுக்கு 2018 ஆம் ஆண்டே தெரிந்தாலும்,

The Crown Casino, which is facing tax evasion charges, has offered to pay $ 61 millionவிக்டோரியன் கமிஷன் விசாரணையை தொடங்கிய பிறகு தான் இது குறித்து வாய் திறந்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தற்போது 63 மில்லியன் டாலரை செலுத்த முன்வந்திருக்கும் கிரவுன் கேசினோவின் நடவடிக்கை
நகைச்சுவையாக உள்ளதாக சூதாட்ட சீர்திருத்தங்களுக்கான அமைப்பின் வழக்கறிஞர் Reverend Tim Costello தெரிவித்துள்ளார்.

கிரவுன் சூதாட்ட நிறுவனத்துடன் எந்த விதமான தொழில் தர்மமும் இல்லை என்றும், அவர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த விக்டோரிய முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ், ராயல் கமிஷன் பரிந்துரைத்தால் கிரவுன் சூதாட்ட விடுதியின் அனுமதியை ரத்து செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

The Crown Casino, which is facing tax evasion charges, has offered to pay $ 61 million,.சூதாட்ட விடுதிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை தொடர்ந்து விக்டோரியாவுக்கான சூதாட்ட மற்றும் ஒழுங்கு முறை ஆணையம் விசாரணை மேற்கொண்டதில் இருந்து பல்வேறு அதிர்சிகரமான தகவல்கள் வெளிவந்த வண்னம் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க முன்னாள் பெடரல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரெய்மாண்ட் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இறுதி விசாரணை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், ராயல் விசாரணை ஆணையத்தின் அறிக்கை அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/stuCE