Breaking News

கொரோனா விதிமுறையை மீறி குயின்ஸ்லாந்து மாகாணத்துக்குள் நுழைந்த தம்பதிக்கு தலா $4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

The couple was fined $ 4,000 each for entering Queensland in violation of Corona rules.

விக்டோரியா மாகாணத்தில் கடந்த மே மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த தருணத்தில் மெல்போர்ன் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பிறகு இந்த ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருந்து போது தவறான தகவல் கொடுத்து குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைந்த மெல்போர்ன் தம்பதி சன் ஷன் கடற்கரை உட்பட பல இடங்களில் தங்கள் விடுமுறை கழித்துள்ளனர்.

The couple was fined $ 4,000 each for entering Queensland in violation of Corona rules,.இத்தம்பதிக்கு ஜூன் முதல் வாரத்தில் தொற்று கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் பயணம் செய்த இடம் முழுவதும் தொடர்பறிதல் நடவடிக்கையை குயின்ஸ்லாந்து மாகாண அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் தவறான தகவல் அளித்து நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தம்பதிகள் இருவருக்கும் தலா $4 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் விடுதி தனிமையில் இருந்த 29 வயது நபர் ஒருவர் தப்பிக்க முயன்ற போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி டாட்கர் ஜென்னட் யங் தெரிவித்துள்ளார்.

The couple was fined $ 4,000 each for entering Queensland in violation of Corona rulesதொற்று பாதித்த பகுதியில் இருந்து குயின்ஸ்லாந்து மாகாணத்திற்குள் நுழைபவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாகாண முதல்வர் அனஸ்டேசியா தெரிவித்துள்ளார்.
மேலும் 50-59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தலாம் என்று அரசு எடுத்துள்ள முடிவை தொடர்ந்து, கூடுதல் தடுப்பூசியை வழங்க காமன்வெல்த் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Link Source: https://ab.co/3gIrCIF