Breaking News

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை அடுத்து பெய்ஜிங் நகரம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

The city of Beijing is slowly returning to normalcy following a gradual relaxation from the corona caused by the corona.

சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாகவே கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக பெய்ஜிங், ஷாங்காய் நகரங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டது. தற்போது கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையடுத்து இரண்டு நகரங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து அந்தந்த மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்துள்ளன. பெய்ஜிங்கிலுள்ள ஃபெண்டாகி மற்றும் ஃபெண்டகி மாவட்டங்களை தவிர்த்து அனைத்து பகுதிகளுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஷாங்காய் நகரம் முழுவதும் குறிப்பிட்ட சில தளர்வுகள் கூறப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பொது இடங்களில் கூடுவதற்கும் பொது போக்குவரத்து வாகனங்களில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே பெய்ஜிங் மற்றும் ஷாங்காயில் கொரோனா இறப்பு எண்ணிக்கை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.