Breaking News

மாரத்தான் போட்டியில் 21 வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாகாண மேயர் உட்பட 27 அரசு அதிகாரிகள் மீது சீன அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜிண்டாய் மாகாணத்தில் 100 கிமீ தொலைவிலான மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டியானது, கரடு முரடான நிலப்பரப்பு, மலைகளை கடக்கும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.

போட்டியாளர்கள் குவான்ஸூ மாகாணத்தில் உள்ள மலை சிகரத்தில் ஏறும் போது வீசிய குளிர் காற்றாலும், மோசமான வானிலையாலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கடுமையான குளிர் காற்றால் ஏற்படும் ஹைப்போ தெரிமியா என்னும் பாதிப்பால் 21 போட்டியாளர்கள் உயிரிழந்தனர்.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளாமல் போட்டியை நடத்தியதற்காக ஜிங்டாய் மாகாண தலைவர் அப்பதவியில் இருந்து நீக்கபட்டுள்ளார்.

மேலும் பையின் நகர மேயர் உட்பட அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை உட்பட, பதவியிறக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The Chinese government has taken action against 27 government officials, including the provincial mayor, in connection with the death of 21 athletes in a marathonஇது தொடர்பாக விசாரணை மேற்கொண்டவர்கள் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் மோசமான வானிலையின் போது நிகழ்ச்சியை நடத்தியதே இந்த விபரீதத்திற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆடு மேய்ப்பவர் ஒருவர உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 6 போட்டியாளர்களின் உயிரை காப்பாற்றியதும் தெரியவந்துள்ளது.

மோசமான வானியில் சிக்கியவர்களை தான் தங்கிய குகைக்கு அழைத்துச்சென்று ஆடைகளையும், உணவுகளையும் கொடுத்து உதவியது தெரியவந்துள்ளது. அப்போது போட்டியாளர் ஒருவர் சுய நினைவின்றி இருந்ததும் தெரியவந்துள்ளது.

வானிலை சீரானவுடன் போட்டியாளர்களை மீட்க 1200 பேர் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் நவீன ட்ரோனகள், வெப்பம் அறியும் ரேடார்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 2019 சீன பாராலிம்பிக் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற லியாங் ஜுங் மற்றும் ஹூங் கான் ஜூவான் என்பதும் தெரியவந்துள்ளது.

Link Source: https://ab.co/3vkpgDI