Breaking News

கட்டுமான ஆணையம் மற்றும் சங்கத்துக்கு இடையேயான சண்டையை சமரசம் செய்துவைத்த மத்திய அரசு..!!

கான்பெர்ராவின் கட்டுமான தொழிற்சங்கத்திற்கும் ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்திற்கும் இடையே நடந்து வர சட்டப்போராட்டத்தை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவந்தது.

The central government has settled the fight between the construction commission and the association

கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு எஃகு மற்றும் சாரக்கட்டுகள் விநியோகம் செய்பவர்கள் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய தொழிற்சங்கம் சார்பாக வலியுறுத்தப்பட்டது என்று நுகர்வோர் ஆணையம் குற்றச்சாட்டை எழுப்பியது.

The central government has settled the fight between the construction commission and the association.அதைதொடர்ந்து கான்பெர்ராவின் கட்டுமான தொழிற்சங்கத்தின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போதைய சங்கத்தின் தலைவர் ஜேசன் ஓமைரா மீது நுகர்வோர் ஆணையம் முறைகேடு புகார் தெரிவித்தது. இதனால் ஆணையத்தின் மீது தொழிற்சங்கம் வழக்கு தொடர்ந்தது. ஆனால் முறையான சாட்சியங்கள் இல்லை என்று கூறி, கடந்தாண்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு தொழிற்சங்கத்துக்கு இழப்பீடு தொகையாக . 1.2 மில்லியன் டாலரை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதையடுத்து நுகர்வோர் ஆணையம் மற்றும் தொழிற்சங்கத்துக்கு இடையே நடந்துவந்த போட்டி முடித்துவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.