Breaking News

தீவிர புயல் சிரோஜா கரையை கடப்பதால் மேற்கு ஆஸ்திரேலியா பகுதி வாசிகளை பாதுகாப்பாக இருக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

புயலின் தீவிரத்தன்மையை கண்காணிக்கும் வானிலை ஆய்வு மையம் அண்மை காலங்களில் நாம் கண்டிராத அதி தீவிர புயலாக இப்புயல் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

3 ஆம் எண் புயலாக வகைபடுத்தப்பட்டுள்ள இப்புயல் கல்பாரி மற்றும் கிரிகாரி இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

புயலின் காரணமாக கல்பாரி பகுதியில் மணிக்கு 170 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி வரை 111 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியா பகுதியில் புயலின் பாதையில் உள்ள 800 கிமீ சுற்றளவிற்கு மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கப்பட்டுள்ளது..

Carnarvon முதல் Lancelin இடையே ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Mark McGowanNorthampton, Perenjori, Shark Bay மற்றும் Three spring பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என்று பிரிமீயர் Mark McGowan தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை உணர்ந்து உடனடியாக செயல்படுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உயிர்களுக்கும், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கும் வகையில் இந்த புயல் மிகப்பெரிய அளவில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..

புயல் பாதுகாப்பு மையங்கள் Dennison, Carnarvon,Denham பகுதிகளில் திறக்கப்பட்டதாக கூறும் பிரீமியர் , மக்கள் பாதுகாப்புடன் வீடுகளில் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

புயலின் மோசமான வானிலை சுமார் 3 மணி நேரம் வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ராட்சத அலை, அதி தீவிர கனமழை மண் அரிப்பு போன்ற பாதிப்புகள் புயலின் காரணமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

WA பகுதியில் உள்ள அனைத்து மருத்துமனைகளும் அவசர சிகிச்சையளிக்க தயாராக உள்ளதாக பிரிமீயர் தெரிவித்துள்ளார்.

Avon ஆற்றுப் பகுதி, மூரிச்சன் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.