Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் வெள்ள பாதிப்பை சீர் செய்யக்கூடிய பணியில் உள்ளூர் நிர்வாகங்கள் ஈடுபட்டு வரும் நிலையில் வானிலை எச்சரிக்கை தொடர்ந்து நீடித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The Center for Meteorology in New South Wales says the weather warning is continuing as local administrations work to mitigate whitewash.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தெற்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் சற்று குறைந்த நிலையில் மீட்பு நடவடிக்கைகளையும் வெள்ளத்தில் சிக்கிய 30 பேரை மீட்டுள்ளதாக அவசரகால சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மழையை தொடர்ந்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
ஒரே நாளில் சுமார் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அவசர உதவி தொலைபேசி எண்ணுக்கு 450க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்ததாகவும், 31 பேர் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The Center for Meteorology in New South Wales says the weather warning is continuing as local administrations work to mitigate whitewash..இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவசர உதவி துறையின் துணை ஆணையர் Nicole Hogan வெள்ள எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டு இருந்தாலும் பொதுமக்கள் நீர்நிலைப் பகுதிகளில் செல்லும்போதோ சாலை மார்க்கமாக செல்லும் போதோ எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதேபோன்று மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாகவும் ஆற்றில் பாய்ந்து ஓடும் நதியின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Illawara, Southern Table Land, South Coast பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை நீடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் ஒருவருடைய உடல் அடையாளம் காணப்பட்டது அவர் சிட்னியை சேர்ந்தவர் என்றும் முப்பத்தி எட்டு வயதான பெண் ஒருவர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Center for Meteorology in New South Wales says the weather warning is continuing as local administrations work to mitigate whitewash...அவசர சேவை பிரிவின் தலைமை அதிகாரி கோலின் மெலோன், கூறிய போது புயல் எச்சரிக்கை சற்று ஓய்ந்திருந்தாலும், மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளார். ஏராளமானோரின் வீடுகளும், கடைகளும், வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், கடும் பொருளாதார இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த 10 உள்ளூர் நிர்வாகங்களுக்கு மாகாண அரசு பேரிடர் நிதியை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் Bridget McKenzie, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Link Source: https://ab.co/3lYnpmf