Breaking News

ஆஸ்திரேலியாவில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம் அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

The booster vaccination program in Australia has been officially launched today.

ஆஸ்திரேலியாவில் மே 8 ஆம் தேதிக்கு முன்னதாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான மாகாணங்கள் தங்கள் மக்கள் தொகையில் சராசரியாக 60% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளன.

தடுப்பூசி செலுத்துவது ஒரு புறம் இருந்தாலும், புதிய வகை கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க பூஸ்டர் தடுப்பூசிக்கு பல நாடுகளும் முன்னுரிமை அளித்து வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பைசர் பூஸ்டர் தடுப்பூசிகளுக்கு மருந்து பொருள் நிர்வாகத்துறை அனுமதி வழங்கியதால், ஏற்கனவே மருந்தகங்களில் விற்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து சுமார் 10000 ஆயிரத்துற்கும் மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாரப்பூர்வமாக இத்திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 6 மாதம் இடைவெளியை பூர்த்தி செய்த 18 வயதை கடந்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள்.

The booster vaccination program in Australia has been officially launched today.. அஸ்ட்ராஜெனிகா, மாடர்னா போன்ற எந்த நிறுவனத்தின் தடுப்பூசியை எடுத்திருந்தாலும், இந்த பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட், திட்டத்தின் தொடக்க நாளில் 173000 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசிக்கு மாடர்னா நிறுவனமும் விண்ணப்பித்துள்ள நிலையில், மருந்து பொருள் நிர்வாகத்துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் விநியோகம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் இல்லை என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலே அரசின் தளர்வுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்தாலும், எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்களும், முன்கள பணியாளர்களும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அரசு பரிந்துரைத்துள்ளது.

மேலும் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி இந்தாண்டுக்குள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சிறுவர்களுக்கான தடுப்பூசிக்கு பைசர் நிறுவனம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. பைசர் நிறுவனத்தின் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் கிரேக் ஹண்ட் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3qcUAWe