Breaking News

எல்ஸால்வடோர் நாட்டில் முன்னாள் காவல்துறை அதிகாரியின் இல்லத்தில் புதைக்கப்பட்ட 8 பெண்களின் சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The bodies of eight women buried at the home of a former police officer in El Salvador have caused a stir.

லத்தின் அமெரிக்க நாடான எல்ஸால்வடோர் நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகளவு நடைபெறும் நாடாக உள்ளது.

சான் சால்வடோர் பகுதியில் அண்மையில் இரு பெண்கள் காணாமல் போன வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரியின் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்டனர்.

Hugo Ernesto Osorio Chavez என்ற முன்னாள் காவலரான இவர் பெண்களுக்கெதிரான குற்றங்களில் தண்டனை பெற்றவர் என்பதை அறிந்த காவல்துறையினர் அவரின் வீடு முழுவதும் சோதனையிட்டனர்.

அப்போது பல்வேறு காலக்கட்டங்களில் தோண்டப்படட சுமார் 8 குழிகளில் பெண்களின் சடலங்கள் இருந்ததை கண்டறிந்தனர்.

அதில் தற்போது காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த 57 வயதான தாயும், 26 வயதான மகளும் இருந்தார்களா என்பதை காவல்துறை இன்னும் உறுதி செய்யவில்லை.

தொடக்கத்தில் 24 பேரின் சடலங்கள் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

DNA சோதனைக்கு பிறகே கண்டெடுக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணமுடியும் என்று அதிகாரி Max Munoz தெரிவித்துள்ளார்.

The bodies of eight women buried at the home of a former police officer in El Salvador have caused a stirஉயிரிழந்த பெண்களில் 2 வயது குழந்தைகளின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களை அமெரிக்காவிற்கு அழைத்து செல்வதாக கூறி கொண்டு வரப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வழக்கில் முன்னாள் காவலர், முன்னாள் ராணுவ வீரர், கடத்தல் காரர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மொத்தம் பத்து பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை இயக்குனர் Mauricio Arriaza தெரிவித்துள்ளார்.

உடல்கள் கண்டெடுக்கப்பட்ட தகவல் பரவியவுடன், ஏராளமான பொதுமக்கள் முன்னாள் காவலரின் வீடு முன்பு குவிந்தனர்.

Link Source: https://bbc.in/3fk1B1H