Breaking News

டெக்சஸ் பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேரின் பின்னணி தகவல்கள் வெளியாகி நெஞ்சை உருக்கியுள்ளன.

The background information of 21 people, including children and teachers, who were killed in a shooting incident at a Texas school, has been released..

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள யுவால்டே ராப் எலிமெண்டரி பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தல உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

The background information of 21 people, including children and teachers, who were killed in a shooting incident at a Texas school, has been released.தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் பின்னணி விபரங்கள் வெளியாகி நெஞ்சை கலக்கமடையச் செய்துள்ளன. அதன்படி உயிரிழந்த 10 வயதான அமெரி ஜோ கார்சாவுடைய மரணம் கேட்போரை உருக்கச் செய்துள்ளது. தன்னுடைய நெருங்கிய தோழி சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை அவள் பார்த்துள்ளாள். அதை பார்த்து உடனடியாக தன்னுடைய செல்போனை எடுத்து 911 அவசர உதவி எண்ணை அழைத்துள்ளாள். சிறுமி அவசர உதவியுடன் தொடர்பில் இருக்கும் போது, அதை பார்த்த கொலையாளி, கொலைவெறியில் அமெரியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டான்.

The background information of 21 people, including children and teachers, who were killed in a shooting incident at a Texas school, has been releasedஇந்த தகவலை சிறுமி அமெரி ஜோ கார்சா வெளியிட்டுள்ளார். இதனால் சிறுமியை அப்பகுதி மக்கள் ஒரு ஹீரோ போன்று பார்க்கின்றனர். அதேபோன்று குழந்தைகளை காப்பாற்ற போராடியா ஆசிரியை இர்மா கிராஸியாவை துப்பாக்கிதாரி சுட்டுக் கொன்றான். அவருடைய மகள் தன்னுடைய தாயிக்கு சமூகவலைதளத்தில் இரங்கல் குறிப்பு எழுதியுள்ளார். அதில், அம்மா உங்களை கட்டியணைத்து என் ஆயுள் முழுக்க உங்களுடைய பெயரை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்று எழுதியுள்ள வரிகள் படிப்பர்களின் நெஞ்சை விம்மச் செய்கின்றன. உயிரிழந்த சிறுமி லைலா சால்சாராவின் தந்தை வின்செண்ட் வாழ்க்கையின் இன்பத்தை தொலைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதுபோன்ற டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியையின் உறவினர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது காண்போரை கண்ணீர் வரச் செய்கின்றன. அமெரிக்காவில் தொடர்ந்து தலைதூக்கி வரும் துப்பாக்கி கலாச்சாரதுக்கு முடிவுகட்ட அரசு மற்றும் பொதுமக்களும் இணைந்து பணியாற்றுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.