சாத்தானை வழிபடும் பிரிவு மக்கள் சிலர், கியூன்லாந்து பள்ளிகளில் மதம் குறித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடி மனு முறையிட்டனர்.
நீதிபதி மார்டின் பர்ன்ஸ் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. முன்பாக இந்த மனு குறித்து நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் செய்த பள்ளிக்கல்வித்துறை, இத்தகைய பாடத்திட்டம் மதமோதலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்திருந்தது.
இதை கருத்தில் கொண்ட நீதிபதி பள்ளிகளில் மதம் குறித்து படிப்பதற்கு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற மனுவை தள்ளுபடி செய்தார். மேலு மனுவை முறையிட்ட ராபின் பிரிஸ்டோ என்பவர், 2 வார காலத்திற்குள் நீதிமன்றம் முன்பு ஆஜராகி மனு முறையிட்டத்தன் காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்பது உத்தரவிட்டார்.