Breaking News

கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து இதுவரை 3000 பேர் விக்டோரியா மாகாணத்தில் உயிரிழந்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

The Australian government says 3,000 people have died in the state of Victoria since the corona spread began.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் நிலவி வருகிறது. நாடு முழுவதும் ஏற்பட்ட மரணங்களில் பாதி பேர் விக்டோரியா மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். எனினும் உலகளவில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் ஆஸ்திரேலியாவில் 0.12 சதவீத உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை 1525 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதை தொடர்ந்து ஏப்ரல் 4-ம் தேதி வரை 3012 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் சமீபகாலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.