Breaking News

கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து சாலமன் தீவுகளுக்கு 8 மருத்துவ பணியாளர்களை ஆஸ்திரேலியா நாட்டு அரசு அனுப்பி வைத்துள்ளது.

The Australian government has sent eight paramedics to the Solomon Islands following the escalation of the Corona outbreak.

இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மாரீஸ் பேய்ன், பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், பிசிஃபிக் அமைச்சர் ஜெட் ஷீஷீல்ஜா கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலமன் தீவுகளின் கோரிக்கையை அடுத்து ஆஸ்திரேலியா அரசு மருத்துவ பணியாளர்களை அனுப்பி வைத்துள்ளது.

The Australian government has sent eight paramedics to the Solomon Islands following the escalation of the Corona outbreak..மொத்தம் 37,800 எண்ணிக்கையிலான ஆஸ்ட்ராஜென்காவின் தடுப்பூசிகள் சாலமன் தீவுகளுக்கு ராயல் ஆஸ்திரேலியன் ஏர் ஃபோர்ஸ் சி-17ஏ விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் கொண்ட மருத்துவக் குழுவில் அவசர மருத்துவம், தொற்று நோய் கட்டுப்பாடு, தளவாடங்கள் மற்றும் தொழில்சார் சிகிச்சை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் உள்நாட்டுலுள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் இணைந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபடுவர். ஆஸ்திரேலியா நாடு தடுப்பூசிகளுடன் சேர்த்து 19 டன் கணக்கிலான மருத்துவ பொருட்கள், 100 ஆக்சிஜன் செறிவூட்டிகள், பி.பி.இ கிட்டுகள் உள்ளிட்டவற்றையும் சாலமன் தீவுகளுக்கு வழங்கியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3ocaPB9