Breaking News

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் நடத்தி வரும் போரில் நேட்டோ வழியாக ஆயுதங்களை வழங்கிட ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது.

The Australian government has decided to supply arms via NATO to Ukraine's ongoing war against Russia.

ஏற்கனவே அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ளன. முன்னதாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 350 அமெரிக்க டாலர்கள் மதிப்புக்ள் ஜாவ்லின் ஆண்டி-டாங்க் உள்ளிட்ட மிகப்பெரிய ஆயுதங்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அதையடுத்து ஜெர்மனி நாடு தன்னிடமுள்ள ஆண்டி-டாங்க் ஆயுதங்கள் மற்றும் ஏவுகனைகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. இதையடுத்து உக்ரைனுக்கு ராணுவத்துக்கு ஆஸ்திரேலியாவும் பல்வேறு ஆயுதங்களை வழங்கவுள்ளதாக பிரதமர் ஸ்காட் மோரீசன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ உதவியுடன் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஆனால் எந்தெந்த ஆயுதங்களை ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு வழங்கும் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக கிடைத்துள்ள தகவலின் படி, ஆயுதங்கள் ஆகியவற்றுடன் மருந்து உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் உக்ரைனுக்கு ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/33Z12Yf