Breaking News

ஆஸ்திரேலிய அரசு, தன்னுடைய வேலைவாய்ப்பு சேவைகளை வழங்கும் திட்டத்துக்கு பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு சேவைகளை வழங்குநர் என்று மாற்றம் செய்துள்ளது.

The Australian Government has changed the name of its Employment Services Provider to Employee Employment Services Provider.

நாளுக்கு நாள் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பை களையும் நோக்கில், ’ஜாப் ஆக்டிவ்’ என்று வேலைவாய்ப்பு திட்டத்துக்கு வழங்கப்பட்டு வந்த பெயரை, வேலைவாய்ப்பு சேவைகளை வழங்குநர் என்று அரசு மாற்றம் செய்துள்ளது.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற்று வந்தவர்கள் புதிய திட்டத்துக்கு மாற்றம் செய்யப்படவுள்ளனர். மக்களிடையே வேலை குறித்த செய்திகளை சென்று சேர்க்க இந்த பெயர் மாற்றம் உதவும் என ஆஸ்திரேலியாவின் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு சேவைகளை வழங்குநர் திட்டத்துக்கான இணையத்தில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நேரடி சேவைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வேலை தேடுபவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் 20 வேலைவாய்ப்பு தகவல்கள் அனுப்பப்படும்.

வேலைவாய்ப்பு விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், நேர்காணல்களில் பங்குபெறுதல், இணையம் வழியாக கற்றல் அனுபவங்களை பெறுபவர்களுக்கு புள்ளிகள் அவர்களுடைய கணக்கில் வழங்கப்பட்டு வரும். இணையம் வழியாக 100 புள்ளிகளை பெறுபவருக்கு மாதம் ஊதியம் வழங்கப்படும்.

வேலை தேடுபவர்கள் புள்ளிகளை பெற தவறினால், வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் குறைவாக அனுப்பி வைக்கப்படும். இதில் பதிவு செய்ய விரும்பாதவர்கள், மற்ற வேலை வாய்ப்பு தளங்களிலும் வேலைவாய்ப்பு தகவல்களை பெறலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.