Breaking News

மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 25 லட்சம் கொரோனா தடுப்பூசி வாங்குவதற்கு ஆஸ்திரேலிய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

The Australian government has agreed to buy 25 lakh corona vaccine from Moderna.

ஆஸ்திரேலியாவில் தற்போது astrazeneca மற்றும் பைசர் ஆகிய தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆஸ்திரேலியாவில், இதுவரைக்கும் சுமார் 27 இலட்சம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது நாட்டின் தேவைக்காக மாடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் இருந்து 25 மில்லியன் தடுப்பூசி கொள்முதல் செய்யப்படும் என்றும் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

10 மில்லியன் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 15 மில்லியன் தடுப்பூசி 2022 ஆண்டுக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு, செப்டம்பர் மாதத்துக்குள் ஒரு மில்லியன் தடுப்பூசியும் மீதமுள்ள 9 மில்லியன் தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் ஆஸ்திரேலியாவிடம் வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மாடர்னா தடுப்பூசிக்கு ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் போன்ற நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலும் மருந்தியல் கட்டுப்பாட்டு துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்படும் என்றும் மாடர்னா தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்நாட்டிலேயே mRNA தடுப்பூசிகள் தயார் செய்ய உரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார் .

மேலும் மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் தடுப்பூசி அடுத்தாண்டு தொடக்கத்தில் மாடர்னா நிறுவனம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு Astra Zeneca தடுப்பூசியு,ம் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பைசர் நிறுவன செலுத்தப்பட்டு வருகிறது.

astrazenecaAstraZeneca தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒரு சிலருக்கு ஏற்பட்ட ரத்த உறைதல் பாதிப்பின் காரணமாக 50 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அந்த நிறுவன தடுப்பூசியை செலுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. மேலும் மற்ற நிறுவனங்களிடமும் கூடுதல் தடுப்பூசியை பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த எதிர்கட்சியின் முக்கிய நிர்வாகி ஜிம் சால்மர், அரசு உரிய காலத்தில் தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் செய்யாததால், நம் நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையை அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3y7Bm5T