Breaking News

ஆஸ்திரேலியாவில் 12-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியை செலுத்த ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

The Australian Department of Health has approved the vaccination of children aged 12-17 in Australia.

ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்த, மருந்து பொருள் நிர்வாகத்துறை ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பைசர் தடுப்பூசியை போன்றே MRNA தொழில் நுட்பத்தில் செயலாற்றும் மாடர்னா தடுப்பூசிக்கும் ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

The Australian Department of Health has approved the vaccination of children aged 12-17 in Australia..
ஆஸ்திரேலியாவில் தற்போது பதின்ம வயது சிறுவர்களுக்கு மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 18 வயது மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகளில் இன்னும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு எந்த ஒப்புதலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத இறுதியில் மாடர்னா தடுப்பூசி ஆஸ்திரேலியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாடர்னா தடுப்பூசி 60 வயதுகுட்பட்டோருக்கு மருந்தகங்களில் விற்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Australian Department of Health has approved the vaccination of children aged 12-17 in Australia,செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் 12-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்புசி செலுத்த முன்பதிவு செய்யலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாடர்னா தடுப்பூசிக்கு மருந்து பொருள் நிர்வாகத்துறை ஒப்புதல் வழங்கியிருந்தாலும், தடுப்பூசி அலோசனைக்குழுவிடம் கருத்து கேட்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3yGRGcN