Breaking News

சிரிய சுதந்திரப் படையினரிடம் மாட்டிக்கொண்ட 17 வயது ஆஸ்திரேலியா சிறுவன் உயிருக்கு போராடுவதாக அனுப்பிய ஆடியோ உலகையே உலுக்கியுள்ளது.

The audio of a 17-year-old Australian boy trapped by Syrian Freedom Fighters fighting for his life has shaken the world..

அமெரிக்க ஆதரவு பெற்ற குர்ஷித் சிரிய படைகள் சிரியாவின் ஹசாகாவை கைப்பற்றியுள்ளது. அங்குள்ள குவேரியன் சிறைச்சாலையை கைப்பற்றிய படையினர், தங்களுடைய ஆதரவாளர்களை விடுவித்தனர். அப்போது அந்த சிறைச்சாலையில் இருந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவனை தங்கள் வசம் வைத்துக் கொண்டனர்.

The audio of a 17-year-old Australian boy trapped by Syrian Freedom Fighters fighting for his life has shaken the world.இந்நிலையில் அந்த சிறுவன் உதவிக் கோரி ஆடியோ தகவல் அனுப்பியுள்ளான். அதில். ஹெலிகாப்டர் தாக்குதலின் போது தன்னுடைய தலை, கைகளில் அடிப்பட்டுள்ளதாகவும், படுகாயமடைந்த இடங்களில் இருந்து ரத்தம் வெளியேறி வருவதாகவும், உடனடியாக தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தான். இதுதொடர்பான தகவலை உறுதி செய்துள்ள ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட சிறுவனை மீட்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பும் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. எனினும் சிறுவனின் தற்போதைய நிலை குறித்த தகவலை ஆஸ்திரேலிய அரசு வெளியிடாமல் உள்ளது.

Link Source: https://bit.ly/3ramWAC