Breaking News

விக்டோரியா சவுத் பேங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The area has been declared a restricted area as two people have been confirmed infected in an apartment in Victoria South Bank.

விக்டோரியாவில் தொற்று பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் மெல்போர்ன் நகர் பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவி வந்தது.

திங்கட்கிழமை சவுத் பேங்க் பகுதியில் உள்ள கிங்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரிடம் ரேபிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

The area has been declared a restricted area as two people have been confirmed infected in an apartment in Victoria South Bankஇவர்களில் நேற்று மட்டும் 2 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியை முதல் நிலை தொற்று பாதித்த பகுதியாக அறிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், ஜூன் 2 முதல் – ஜூன் 14 வரை இந்த குடியிருப்புக்கு வந்து சென்றவர்கள் அனைவரும் தாங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மார்ட்டின் போலி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமலில் இருந்த போது இவர்களுக்கு தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதால், இவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பொது சுகாதாரத்துறை பேராசிரியரான நாதன் கிரில்ஸ், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை ஒரு புறம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய நேரத்தில், வரும் நாட்களில் இந்த தொற்று பரவல் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதும் அவசியம் என்று கூறுகிறார்.

பேராசிரியர் நான்சி பேக்ஸ்டர் கூறிய போது, கப்பா வகை வைரஸ் பரவல் ஏற்படுவது சற்று கவலைக்குறியதாக உள்ளதாகவும், இதன் பரவல் வேகம் அதிகமாக உள்ளதாகவும் பேக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

The area has been declared a restricted area as two people have been confirmed infected in an apartment in Victoria South Bank..தொற்று பரவல் ஒரு புறம் இருந்தாலும், விக்டோரியா மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளா தொற்று நோய் சிறப்பு மருத்துவர் நான்சி பெக்ஸ்டர் மக்கள் முகக்கவசம் அணிவதும், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் , எவ்வளவு விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்கிறோமோ, அவ்வளவு விரைவில் தளர்வுகள் நமக்கு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3xhuMIO