Breaking News

ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ஜூலை 1 முதல் உயருக்கிறது.

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் வரும் ஜூலை 1 முதல் குடியுரிமை விண்ணப்ப கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு $ 285 ஆக இருக்க விண்ணப்ப  கட்டணத்தின் விலை, வரும் ஜூலை முதல் $490  ஆக உயர்த்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த குடியுரிமை விண்ணப்ப கட்டணத்தின் விலை தற்போது தான் உயர்த்தப்படுவதாகவும் அமைச்சர் ஹாக் தெரிவித்துள்ளார்.

பண வீக்கம்,  ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, காலதாமதம் போன்ற காரணங்களால் இந்த விலையேற்றம் அவசியம் என்றும் அமைச்சர் அலெக்ஸ் விளக்கமளித்துள்ளார்.

The application fee for obtaining Australian citizenship rises from 1 Julyபெற்றோர்களுடன் விண்ணப்பிக்கும் 15 வயத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு விண்ணப்ப கட்டணம் வழக்கம் போல இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிப்பட்ட முறையில் குழந்தைகளுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கான விண்ணப்ப கட்டணம் 180$ல் இருந்து, 300$ ஆக  உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வம்சாவளியை சேர்ந்தவர்களுக்கான விண்ணப்ப கட்டணம் 250$ ல் இருந்து $315 ஆக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரிமை விண்ணப்பத்தின் விலை உயர்த்தப்பட்டாலும் , ஒரு விண்ணப்பத்தை  பரிசீலிக்க ஆகும் செலவில் 50% மட்டுமே வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை விண்ணப்ப கட்டணம்  உயர்த்தப்பட்டாலும், மற்ற நாடுகளுடன்  ஒப்பிடுகையில் இந்த கட்டணம் மிகக குறைவாகவே  இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளை விட விண்ணப்ப கட்டணத்தின் விலை குறைவாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/35P4ySn