Breaking News

இந்தியாவில் கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

The 3rd wave of corona infection in India will start by the end of August, according to ICMR.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் ,

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The 3rd wave of corona infection in India will start by the end of August, according to ICMR,இது 2வது அலை போல தீவிரமாக இருக்காது என்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய 3வது அலை இருக்கும், ஆனால் அது 2வது அலை போல அதிகமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கும் என்று அர்த்தமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளான சமூக விலகல், முகக்கவசம், தடுப்பூசிசெலுத்துதல், கைகளை அடிக்கடி கழுவுதல் போன்றவற்றை முறையாகப் பின்பற்றாவிட்டால், 3-வது அலை விரைவாக வருவது சாத்தியம் என்று ஏற்கெனவே மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

The 3rd wave of corona infection in India will start by the end of August, according to ICMRகொரோனா வைரஸ் 3-வது அலையிலிருந்து மக்களைக் காக்கும் முக்கியக் கேடயமாக இருக்கப் போவது தடுப்பூசி மட்டும்தான் என்று உலகளாவிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்ததை தொடர்ந்து தடுப்புசி செலுத்துவதை அரசு தீவிரப்படுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Link Source: https://bit.ly/3iwpcwz