Breaking News

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே 11 நாட்களாக நடைபெற்று வந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது.

The 11-day fighting between Israel and Hamas has come to an end.

காசா பகுதியில் நடைபெற்ற சண்டையில் குழந்தைகள் உட்பட 200க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில் , இஸ்ரேல் நாட்டுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர்.

ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே 50 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் நிலவி வருகிறது.

The 11-day fighting between Israel and Hamas has come to an endபாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசா முனை பகுதி உள்ளது. இந்தப் பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. இந்த அமைப்பை பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேல் கருதுகிறது. இந்நிலையில், இஸ்லாமியர்களும் யூதர்களும் தங்களது புனித இடமாகக் கருதும் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடியாக காசா முனை மீது இஸ்ரேல் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதனை அடுத்து இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைத் தாக்குதலை நடத்தின.

மே 10ஆம் தேதி முதல் இஸ்ரேல் ராணுவத்தினர் காசா மற்றும் மேற்கு கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் 200க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர் என்றும், இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் என்றும் பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது.

காசா பகுதியில் போர் நிறுத்தத்தம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். .

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது என ஹமாஸ் அமைப்பின் நிர்வாகி Ali Barakeh தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுக்கு ஏற்பட்ட தோல்வி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The 11-day fighting between Israel and Hamas has come to an end,அதே போல இஸ்ரேலும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்ப்பதாக தெரிவித்துள்ளது. எகிப்து அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சிக்கு அரசியல், பாதுகாப்பு படை என்று அனைத்து இஸ்ரேலிய அமைப்பு தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்ததாக அதிகாரி Shin Bet தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ நா பொதுச்செயலாளர் Antonio Guterres, காஸா பகுதியில் நிலவிய போர் அப்பகுதியை பூமியின் நரகமாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

காஸாவின் சாலை, மின் கட்டமைப்பு என்று அனைத்தும் சேதமடைந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

போரின் போது பொதுமக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பது முதல் விதி என்றும் அதை இருவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3wVes0d