Breaking News

பரிசோதனையில் கொரோனா இல்லை- ஆனால் அறிகுறிகள் தொடர்கிறது..!! என்ன செய்யலாம்..??

கோவிட்-19 பரிசோதனை முடிவு எதிர்மறையாக வந்தும், உடலில் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Tests show no corona- but symptoms persist..!! What can be done

சுய பரிசோதனை எனப்படும் ரேபிட் ஆண்டிஜென் பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இல்லை என்று வந்தால், உங்களுக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று கிடையாது என்பதை உறுதியாக கூற முடியாது. அடுத்து நீங்கள் பி.சி.ஆர் எனப்படும் ’பாலிமரேஸ் செயின் ரியாக்‌ஷன்’ என்கிற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக ரேபிட் பரிசோதனை முறை தவறு என்பது கிடையாது. எந்தவிதமான அறிகுறிகள் இல்லாதவர்களுக்குக் கூட கொரோனா பாதிப்பு பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்படுகிறது. வைரஸின் பாதிப்பு தன்மையை பொறுத்து பரிசோதனை முறை மாறுபடுகிறது என்பதே உண்மை. சில நேரங்களில் போதுமான மாதிரிகளை சேகரிக்காதது மற்றும் பரிசோதனைக் கருவியினை முறையாக பயன்படுத்த தவறுவது உள்ளிட்ட காரணங்களாலும், தொற்று முடிவுகள் எதிர்மறையாக அமையக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது.

கோவிட்-19 வைரஸ் பாதிப்பை பொறுத்தவரையில், பி.சி.ஆர் பரிசோதனை துல்லியமாக தொற்று பாதிப்பை உறுதிசெய்கிறது. ஒருவேளை ரேபிட் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று முடிவுகள் கிடைத்தும், அறிகுறிகள் தொடரும் பட்சத்தில் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படாமல், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு வேறு ஏதேனும் வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும். குறிப்பிட்ட நோயாளிகள் மருத்துவர்களை ஆலோசித்து, அதற்குரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய காலத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு நோய் பாதிப்பு பலருக்கு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலருக்கு 5 நாட்கள் முதல் 10 நாட்களை கடந்தும், கோவிட்- 19 வைரஸ் உடலில் இருந்து கொண்டே இருக்கும். அதை உறுதிப்படுத்தவும் பரிசோதனையை தொடர்ந்து மேற்கொள்வது அவசியம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு 48 மணிநேரத்துக்கு பிறகு, அறிகுறிகள் தென்படத் தொடங்கும். குறிப்பிட்ட நபருக்கு 72 மணிநேரத்தை கடந்தும் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றால், அது உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தாலோ, குறிப்பிட்ட நபர் 7 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரேலிய பொது சுகாதாரம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் தடுப்பதற்கும், சமூக பரவலாக மாறாமல் இருப்பதற்கும் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயமாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.