Breaking News

நியூசிலாந்தின் ஆக்லாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாத தாக்குதல் : சம்பவத்திற்கு பின் மாற்றம் பெறும் தீவிரவாத அமைப்பின் வீரம், அவநம்பிக்கை

Terrorist attack on a supermarket in Auckland, New Zealand. The heroism and distrust of the terrorist organization that changed after the incident

நியூசிலாந்தில் உள்ள North Island மாகாணத்தின் ஆக்லாந்து நகரில் இருக்கும் Countdown பல்பொருள் அங்காடியில் இந்த தீவிரவாதி ஒருவர் நீளமான கத்தி ஒன்றை எடுத்து அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தத்தொடங்கினார். இதில் 6 பேருக்கு பலமான கத்தி வெட்டு மற்றும் படுகாயங்கள் ஏற்பட்டது.

Terrorist attack on a supermarket in Auckland, New Zealand, The heroism and distrust of the terrorist organization that changed after the incidentஇதில் மூன்று நபர்களின் கழுத்து பகுதியிலும், மார்பு பகுதியிலும் பலமான காயங்கள் ஏற்பட்டு, உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து, அந்த நபரை தடுக்க முயன்றனர். எனினும், தடுக்க முடியாமல் போனது.

எனவே, வேறு வழியின்றி அந்த நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். அதன் பின்பு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர், இலங்கையை சேர்ந்தவர்.

எனினும், நியூசிலாந்தில் தான் கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறார். மேலும், அவர் ‘ஐஎஸ்ஐஎஸ்’ தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும், நியூசிலாந்தின் தீவிரவாத கண்காணிப்பு பட்டியலில் அந்த நபரின் பெயர் இணைக்கப்பட்டு, கடந்த 2016-ஆம் வருடத்திலிருந்து, காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருக்கிறார்.

Terrorist attack on a supermarket in Auckland, New Zealand.,. The heroism and distrust of the terrorist organization that changed after the incidentஇதுகுறித்து நியூசிலாந்து போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ கோஸ்டர் கூறுகையில், சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி, ஐஎஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளராக இருந்துள்ளார். இவருடன் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார். இந்நிலையில், இந்த கொடூர தாக்குதல் குறித்து Countdown LynnMall-ன் பாதுகாப்பு மேலாளர் Kiri Hannifin கூறுகையில், ஊழியர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வன்முறை சம்பவம் காரணமாக கடும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளோம்.

எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என்ன நடந்தது என்பதை நேரில் கண்டாவர்கள், அவர்களுக்கு அது எப்படி இருக்கும் என்று நினைக்கும் போதே அச்சமாக இருக்கிறது.

இந்த சம்பவம் காரணமாக காயம் அடைந்த குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்போம் என்று கூறியுள்ளனர்.

Link Source: https://ab.co/3BFpgSn