Breaking News

சாயிஸ் ஆய்வினால் அச்சமடைந்த தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்..!!

நவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளுக்கான சட்டத்திட்டங்கள் ஆஸ்திரேலியாவில் வகுக்கப்படவில்லை. தனிநபர் குறித்த தகவல் திருட்டு அதிகரித்துவிட்டதாக நிபுணர்கள் புகார்.

Techies and human rights activists terrified by the Choice study

பிரபல நிறுவனங்கள் மீது சாயிஸ் அமைப்பு தெரிவித்துள்ள புகாரை தொழில்நுட்பவியலாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பெருநிறுவனங்கள் சில முகங்களை ஆடையாளம் காணும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை திருடுவதாக சாயிஸ் என்கிற என்கிற நுகர்வோர் அமைப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக குறிப்பிட்ட வாடிக்கையாளர்களிடம் அவ்வமைப்பு நடத்திய ஆய்வில், கே மார்ட், பன்னிங்க்ஸ், தி குட் கைய்ஸ் நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரியாமலேயே, அவர்களுடைய அங்க விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை கண்டறிந்தது.

Techies and human rights activists terrified by the Choice study.முகங்களை அடையாளம் காணுதல், கைரேகைகளை நகல் எடுத்தல், கண்களை ஸ்கேன் செய்தல் போன்ற செயல்களை பயன்படுத்தி குறிப்பிட்ட 3 நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து வந்துள்ளது. அதிலும் கே மார்ட் என்கிற நிறுவனம் வாடிக்கையாளர்களின் கைரேகையை நகல் எடுக்கும் போது, அவர்களுடைய டி.என்.ஏ-வையும் சேகரிப்பது சாயிஸின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான குற்றச்சாட்டுக்களை பன்னிங்க்ஸ் நிறுவனம் ஏற்கனவே மறுத்துவிட்டது. பாதுகாப்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை சாயிஸ் அமைப்பு தொழில்நுட்ப திருட்டுடன் ஒப்பிடுவதை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தனிப்பட்ட நபர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுவது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் சட்டத்திட்டங்களில் எந்தவிதமான வழிமுறைகளும் வகுக்கப்படவில்லை.

தற்போது சாயிஸ் அமைப்பின் ஆய்வில் இருந்த் வெளியாகியுள்ள தகவல்கள் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களை அக்கறை அடையச் செய்துள்ளது. இதனால் குறிப்பிட்ட துறைகளில் இயங்கும் நிபுணர்கள் சாயிஸின் ஆய்வுகள் மீது பரிசீலனை செய்ய துவங்கியுள்ளனர். ஒருவேளை ஆய்வில் கூறப்பட்ட தகவல்கள் உறுதி செய்யப்பட்டால், ஆஸ்திரேலிய அரசு தனிநபர்களிடம் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது குறித்து சட்டத்திட்டங்களை வகுக்க ஆவணம் செய்ய கோரிக்கைவிடப்படும் என்று கூறியுள்ளனர்.