Breaking News

ஆசிரியர்களுக்கு ஊதி உயர்வு: நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு

சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கல்வித்துறையில் தக்கவைக்கும் நோக்கத்துடன் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Teacher pay rise. New South Wales Government decision

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சிறந்த கல்வியை வழங்கும் ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஆனால் அம்மாநிலத்தில் ஆசிரியர்கள் பலர், கல்வித்துறையை விட்டுவிட்டு மேலாண்மை சார்ந்த துறைகளில் பணிக்கு சேருவது அதிகரித்துள்ளது. இதுதொடர்பான விவரங்களை, கல்வியாளர்கள் பலர் அரசின் பார்வைக்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் மாநில கல்வி அமைச்சர் சாரா மிச்செல், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் எதிர்காலத்தை முன்னிட்டு ஆசிரியர்களை தக்கவைப்பதில் முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த வகையில பணியில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஆரம்ப நிலை ஊதியம் 73,737 டாலர்களாக உள்ளது. இதை 117,060 டாலர்களாக அதிகரித்து வழங்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஒரு பள்ளியில் துணைநிலை முதல்வராக பணியாற்றுபவருக்கு 126,528 டாலர் ஊதியம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.