Breaking News

கார்பன் வாயு வெளியேற்றத்திற்கு விதிக்கப்படும் வரி உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் : ஆஸ்திரேலியாவின் முன்னாள் நிதியமைச்சர் Mathias Cormann பருவநிலை மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளுக்கு கோரிக்கை

ஆஸ்திரேலியாவின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டுறவு அமைப்பின் தற்போதைய தலைவராக உள்ள Mathias Cormann, கார்பன் வாயுவுக்கு விதிக்கப்படும் வரியை மிகவும் விலை உயர்ந்த ஏமாற்று வேலை என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க உள்ள நாடுகள் அது தொடர்பான கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று Mathias Cormann கேட்டுக்கொண்டுள்ளார்.

Abbott, Turnbull, மோரிசன் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக 7 ஆண்டு காலம் பணியாற்றிய Mathias Cormann கடந்த ஆண்டு பதவியிலிருந்து விலகினார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டுறவு அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் Mathias Cormann 2050ஆம் ஆண்டு பூஜ்ஜிய உமிழ்வு தொடர்பான பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Taxes on carbon emissions should be the same worldwide. Former Australian Finance Minister Mathias Cormann urges countries attending climate conference.ஜி 20 மாநாடு நடைபெற உள்ள இந்த நேரத்தில் அதன் உறுப்பு நாடுகள் அனைத்தும் கார்பன் வாயுவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும். விதிக்கப்படும் வரியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கான உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் Mathias Cormann கேட்டுக் கொண்டுள்ளார். பல்வேறு நாடுகளில் அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய ஒழுங்கற்ற முறையை சரி செய்வதன் மூலமாக உலக அளவில் ஒட்டுமொத்தமாக வாயு வெளியேற்றத்திற்கான வரி ஒழுங்கை கொண்டுவர முடியும் என்று Mathias Cormann கூறியுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவும், கிளாஸ்கோ COP26 பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவின் நிதி மற்றும் வளர்ச்சிக்கான கூட்டுறவு அமைப்பின் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான Mathias Cormann இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Link Source: shorturl.at/kHOT0