Breaking News

பனிப்பொழிவு, உறைப் பனி போன்ற மோசமான வானிலையால் சவாலை சந்திக்கும் தாஸ்மானிய ஓட்டுநர்கள்.

Tasmanian drivers challenged by bad weather, such as snow and ice.

ஒட்டுநர் பணி என்பது மிகவும் சவாலானது. அதிலும் குறிப்பாக மோசமான வானிலை நிலவும் தருணத்திலும், பனிப்பொழிவு, பனி மூட்டம் ஏற்படும் நேரங்களிலும் ஓட்நர்கள் கடும் சவாலை சந்திக்க நேரிடுகிறது.

Tasmanian drivers challenged by bad weather, such as snow and ice,.வாகன ஓட்டுநர்களுக்கு உதவும் விதமாக,ஆஸ்திரேலிய வானிலை மையம் சார்பாக இரு வகையிலான முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அதாவது, வாகனத்தின் செயல் திறனை பாதிக்கும் வகையிலான வானிலை நிலவும் போதும், வாகன ஓட்டுநரின் செயல்திறனை பாதிக்கும் வகையிலான சீதோஷன நிலை நிலவும் போது ஒருவகையிலான வானிலை முன்னெச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் வெளியிடுகிறது.
குறிப்பாக, சாலைகளில் பனி படர்ந்திருக்கும் போது வாகனங்களை இயக்கினால் வாகனத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

இது போன்ற தருணங்களில் பனிப்பொழிவு எங்கு ஏற்படுகிறது, எவ்வளவு தீவிரமாக உள்ளது என்ற முன்னெச்சரிக்கைகள் வழங்கப்படும்.

Tasmanian drivers challenged by bad weather, such as snow and iceபிளாக் ஐஸ் என்பது மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகிறது. அதாவது அதீத பனிப்பொழிவு இல்லாமல் சாலையின் மீது கண்ணாடி போன்ற ஒரு படலம் ஏற்பட்டிருக்கும். மிக மெல்லிய இந்த படலம் ஒட்டுநரின் கண்களுக்கு எளிதில் தென்படுவதில்லை, வழக்கமான சாலை போன்றே கருப்பு நிறத்தில் காணப்படுவதால் , இது போன்ற ஒரு படலத்தை பிளாக் ஐஸ் என்று நிபுணர்கள் வர்ணிக்கின்றனர்.

கன மழை ஏற்படும் போதும் ,கடுமையான வானிலை மாற்றம் ஏற்படும் போதும் பொதுவாகவே வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

ஆனால் திடீரென ஏற்படும் மேக வெடிப்பு, மேகக்கூட்டம் நகர்ந்து செல்வது போன்ற விவகாரங்களை பின் தொடர்வதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதையும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tasmanian drivers challenged by bad weather, such as snow and ice,அதாவது, குறிப்பிட்ட இடத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவிப்பு கொடுக்கப்பட்டாலும், அந்த பகுதியில் காற்றின் திசை வேகத்தில் ஏற்படும் மாற்றம் போன்ற காரணங்களில் சில கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் அந்த மழை பொழிவு ஏற்படும் தருணங்களில் சிக்கல் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்னொரு வகையிலான முன்னெச்சரிக்கை என்பது வாகன ஓட்டுநரின் செயல் திறனை பாதிக்கும் வகையிலான நிகழ்வுகளை எச்சரிக்கும் அறிவிப்புகள்.

தூசி படலம் அதிகளவு இருக்கும் போதும் , பனி மூட்டம் ஏற்படும் நேரங்களில் ஓட்டுநரின் பார்வைத்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் சரியான தருணங்களில் ஓட்டுநர் முடிவெடுப்பதில் சிக்கலும் ஏற்படுகிறது.

சவால் நிறைந்த தாஸ்மானிய சாலைகளில், பயணிக்கும் போது வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கைகளின் அடிப்படையில் ஓட்டுநர்கள் செயல்படுவது அவசியமானது மட்டுமல்ல பாதுகாப்பானதும் கூட.

Link Source: https://ab.co/2T3R1mX