Breaking News

அரசு பள்ளிகளில் படித்து, 7.5 சதவீத சிறப்பு உள்இடஒதுக்கீட்டின் மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத சிறப்பு உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதில், தேர்வான மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் உயர் கல்வி நிலையங்களுக்குள் நுழைய வேண்டும்.

கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நகர்ப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய கல்வி நிலையங்களில் வந்து சேர வேண்டும். அதற்கான ஏராளமான திட்டங்களை திமுக ஆட்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Chief Minister MK Stalin has announced that the government will pay the tuition fees for students studying in government schools and enrolling in vocational colleges through 7.5 per cent special internal reservation.அரசு பள்ளிகளில் படிக்கிறவர்களில் 69 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்கள்தான். அந்த வகையில் பார்த்தால் கிராமப்புற கல்வி மேம்பாட்டு திட்டமாக இது அமைந்திருக்கிறது.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற உயர் கல்வி படிப்புக்கெல்லாம் மாணவர்களுடைய சேர்க்கையில் 7.5 சதவீதம் இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய இந்த அரசால் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நடப்பு கல்வியாண்டில் இந்த சிறப்பு உள்ஒதுக்கீடு மூலம் பொறியியல் படிப்புகளில் சுமார் 10 ஆயிரம் அரசு மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளியில் படித்த சுமார் 350 மாணவர்கள் வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டப்படிப்புகளில் பயன்பெறுவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் மூலமாக சுமார் 12,500 மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கும் தரமான கல்வியுடன், அந்த மாணவர்களின் வாழ்க்கை தரமும் மேம்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Link Source: shorturl.at/ehoM4