Breaking News

2021-22 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் : பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அறிவிப்பை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

finance minister palanivel thiagarajan.

தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் நிதிநிலை அறிக்கை தனியாகவும், பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து இருந்தார். அது மட்டுமல்லாமல் தமிழகத்தின் நிதிநிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையில் அவர் தாக்கல் செய்திருந்தார்.

Tamil Nadu budget for 2021-22 tabled in Tamil Nadu Assembly. Finance Minister Palanivel Thiagarajan has announced a reduction of Rs 3 per liter in petrol prices.இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021 – 22 ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, மற்றும் புதிய மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் அறிவித்தார். பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் நிலையை கவனத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பை வெளியிட்டார். இந்த விலை குறைப்பு வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து இருந்த நிலையில் ஏராளமான மக்களின் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட படி, நிதிநிலை அறிக்கையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

finance minister palanivel thiagarajanமணி நேரத்தில் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பேருந்து கட்டணம், மின்சாரக் கட்டணம் குறித்த வரி உயர்த்தப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம் பெறும் என்று பல்வேறு யூகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அவை எதுவும் ஏற்படாது என்றும் 2022 23ஆம் நிதி ஆண்டுக்கான அடித்தளமாக இந்த ஆண்டு பட்ஜெட் அமையும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு காகிம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதுவரை இல்லாத வகையில் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பொது நிதி நிலை அறிக்கைக்கு பின்னர் சனிக்கிழமை வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ச்சியை புறக்கணித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Link Source: shorturl.at/cpCD3