Breaking News

தமிழகத்தில் ஒரே நாளில் 5,441 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தாண்டில் கண்டறியப்படட அதிகபட்ச தொற்று இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,441 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9, 20,827 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,752 பேருக்கும், கோவையில் 473 பேருக்கும், நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 23 பேர் பலியானதால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ,863 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் நோய் தொற்றில் இருந்து 1890 பேர் மீண்டுள்ளதால், குணமைடைந்தோரின் எண்ணிக்கை 8,74,305 ஆக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இனி வெளிநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் கூட்ட நெரிசலை குறைக்க நின்றுக்கொண்டு பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் முகக்கவசம் இல்லாவிட்டால்,பெட்ரோல் வழங்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.