Breaking News

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்க தாலிபான்கள் திட்டம் : எச்சரிக்கும் ஆப்கன் கிரிக்கெட் வாரியம்

ஆப்கானிஸ்தானை தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள தாலிபான்கள் அங்கு புதிய அரசு அமைப்பதற்கான பிரதமர், துணை பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான நபர்களை அறிவித்துள்ளது. விரைவில் முழு வீச்சில் அரசாங்கம் அமைய உள்ள நிலையில் கடந்த கால ஆட்சியை போல பெண்களுக்கு எதிரான தடைகளை தரமாட்டோம் என்று தலிபான்கள் தெரிவித்து இருந்தனர்.

ஆனால் பல்வேறு இடங்களில் பணிக்கு செல்வதை தடுப்பது, வேறு சில நடவடிக்கைகளில் பெண்கள் ஈடுபடுவதை தடுக்கும் நடவடிக்கைகளிலும் தற்போது தாலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாலிபான்கள் வெளியிட்டுள்ள அமைச்சரவை பட்டியலில் ஒரு பெண்களின் பெயர் கூட இடம் பெறாதது அதற்கு சான்று என்றும் கூறப்படுகிறது.

Taliban plan to ban women's cricket in Afghanistan. Afghan Cricket Board warns..அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிரிக்கெட் விளையாடுவதை தடுக்கும் வகையிலான திட்டத்தை தாலிபான்கள் அறிவிக்க உள்ளதாக ஆப்கன் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக பெண்கள் கிரிக்கெட்டுக்கு தாலிபான்களின் தடை விதிக்கும் பட்சத்தில் வரப்போகும் சர்வதேச போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்கேற்காது என்றும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியம் இல்லை என்று கருதுவதாகவும் விளையாட்டுக்காக அவர்கள் அணியும் உடைகளை இஸ்லாம் விரும்புவதில்லை என்றும் தாலிபான்களின் செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பெண்கள் விளையாட்டுக்குத் தடை விதிப்பது ஒட்டுமொத்தமாக விளையாட்டை தடை செய்வதற்கு சமமாகும் என்றும், இந்த விவகாரம் குறித்து தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் தாங்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி Hamid Shinwari கூறியுள்ளார்.

Taliban plan to ban women's cricket in Afghanistan. Afghan Cricket Board warns.நவம்பர் மாதம் 27ம் தேதி ஆஸ்திரேலியா – ஆப்கன் இடையே நடைபெறும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை நிறுத்துவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை என்று தாலிபான்களின் கலாச்சாரப் பிரிவு ஆணையத்தின் துணை தலைவர் Ahmadullah Wasiq கூறியுள்ளார். பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது தேவையில்லாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி மற்றும் தாலிபான்கள் உடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதன் பிறகு பெண்கள் கிரிக்கெட் விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும் ஆப்கன் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/2VD4vHC