Breaking News

ஆப்கானிஸ்தானில் இருந்து ஆஸ்திரேலியர்களை மீட்டு செல்வதற்கான விமானத்தை தடுக்கும் தாலிபான்கள் : கண்ணீர் புகை குண்டு, துப்பாக்கிச் சூடு நடத்தி ராணுவ விமானத்தை தரை இறங்க விடாமல் நடவடிக்கை

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் இருந்து ஏராளமானோர் அவர்களின் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர். அமெரிக்கா இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த நாட்டைச் சேர்ந்த படை வீரர்கள் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்களை சிறப்பு விமானம் மூலமாக அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் இதேபோன்று ஆஸ்திரேலியர்களை காபூல் விமான நிலையத்தில் இருந்து மீண்டு வருவதற்கான சிறப்பு ராணுவ விமானத்தை நெருங்கவிடாமல் தாலிபான்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், துப்பாக்கிச் சூடு நடத்தியும் தடுத்து வருகின்றனர்.

Taliban intercepted a plane to rescue Australians from Afghanistan. tear gas and gunfire preventing a military plane from landing.ஏராளமான ஆஸ்திரேலியர்கள் விசாவுடன் காபூல் விமான நிலையத்தில் காத்திருப்பதாகவும், ராணுவ விமானம் அவர்களை அழைத்துச் சென்று விடும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஏராளமான கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தாலிபான்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். அதேநேரத்தில் விமானங்களில் யாரும் நேராத வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கைப்பற்றிய உடனேயே ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். அமெரிக்க படை வீரர்களையும் தூதரக அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்கான விமானத்தில் ஏற முயற்சி செய்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

Taliban intercepted a plane to rescue Australians from Afghanistan. tear gas and gunfire preventing a military plane from landing..அதேநேரத்தில் ஓமன் நாட்டில் தரையிறங்கிய விமானத்தின் டயர்களில் மனித உடல் பாகங்கள் சிக்கி இருந்ததாகவும் தகவல் வெளியானது. இப்போது நிலைமை மோசமாகி வரும் நிலையில் காபூல் விமான நிலையத்தில் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தாலிபான்கள் அங்கு இருப்பவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு நாடுகளின் ராணுவ தளபதி களோடு பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான உரிய தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும், தாலிபான்களின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி குறிப்பிட்ட நாட்டை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/38eAa57