Breaking News

தைவான் அமெரிக்காவுடன் இணைவதற்கு எந்தவித உரிமையும் இல்லை : காரசார விவாதங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

Taiwan has no right to join US. China retaliates against US amid heated debates

தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் பரஸ்பரம் கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில், சீனா தைவான் மீது போர் தொடுக்கும் பட்சத்தில் தாங்கள் பாதுகாப்பாக நிற்போம் என்றும் அமெரிக்காவுடன் இணைந்து கொள்ளலாம் என்பது தொடர்பான கருத்துக்கள் வெளியாகின.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, தைவான் அமெரிக்காவுடன் இணைவதற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை என்றும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்த முனைவதாகவும் சீனா வெளியுறவுத்துறை அலுவலர் Xiaoguang
கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சீனாவின் நடவடிக்கையால் தான் உலக அரங்கில் இருந்து தனித்து விடப்படும் சூழலில் இருப்பதாக அமெரிக்காவின் மாகாண செயலாளர் Antony Blinken தெரிவித்துள்ளார்.

Taiwan has no right to join US. China retaliates against US amid heated debates.சர்வதேச சமூகங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரச்சனைகளை தற்போது சந்தித்து வருவதாகவும் இது உலக அளவில் பொருளாதாரத்தில் எதிரொலித்து வருவதாகவும் தைவான் விவகாரத்தை முன்வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார். இது தைவானில் உள்ள 24 மில்லியன் மக்கள் தொடர்புடையது என்றும்
Antony Blinken கூறியுள்ளார்.

தைவான் விவகாரத்தைப் பொறுத்தவரை இதை முழுவதும் அரசியலாக பார்க்காமல் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்த பிரச்சினையை கையாள வேண்டும் என்றும் இதில் சீனா தொடர்ந்து முரண்டு பிடித்து வருவது நன்மைக்கு அல்ல Antony Blinken என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தைவான் உறவில் எந்தவிதமான பிரச்சனையும் இன்றி பலமுடன் இருப்பதாகவும், சீனாவின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தாங்கள் எந்த நேரத்திலும் தன்னுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் சீனாவின் கண்டனத்தை அடுத்து, வெள்ளை மாளிகை குறிப்பிட்ட கருத்துக்களில் இருந்து பின்வாங்கியது.

Link Source: shorturl.at/yBINS