Breaking News

சிட்னியில் இறுதிச் சடங்குகளில் அதிக அளவில் மக்கள் பங்கேற்பதாக காவல் துறையில் புகார் : வெஸ்டர்ன் சிட்னி கல்லறையில் 4 பேரை கைது செய்து நடவடிக்கை

Sydney Police Arrest 4 in Western Sydney Cemetery...

ஆத்திரேலியாவின் பல்வேறு மாகாணங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் அங்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sydney Police Arrest 4 in Western Sydney Cemetery..இந்நிலையில் இறுதிச் சடங்குகளில் 10 பேர் மட்டுமே பங்கேற்பதற்கான அனுமதி உள்ளநிலையில் வெஸ்டன் சிட்னியில் நடைபெற்ற இறுதிச் சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் 80 பேர் வரை பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள Rookwood கல்லறையில், ஒரே நேரத்தில் மூன்று இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாகவும் காவல்துறையினர் எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் இன்றி கூட்டத்தை கலைந்து போகச் செய்வதாகவும் இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்கள் குறை கூறியுள்ளனர்.

மனைவி,பெற்றோர்,சகோதரர், குழந்தைகள் என உறவு முறைகள் கொண்டவர்கள் மட்டுமே 10 பேர் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க வேண்டும் என்றும் கடுமையான கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் விதிகளை மீறி அங்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்த ஒரு சிலரை காவல்துறையினர் கலைந்து போகச் செய்தனர்.

Sydney Police Arrest 4 in Western Sydney Cemetery.இதனை கண்டித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சவுத் வெஸ்ட் சிட்னியில் இருந்து வந்திருந்த Anwar Elahmad, தனது குடும்பமும் உறவினர்களும் பெரிய அளவில் இருப்பதால் குறைந்தபட்சமாக அனுமதிக்கும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். காவல் துறையினர் எந்த விதமான கருணையும் இன்றி நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் முக கவசம் அணியாமல் நூற்றுக்கணக்கான மக்கள் சுற்றி திரிவதால் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் கடுமையான நடவடிக்கைகளில் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையும் முக்கியமான ஒன்று என்றும் கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் இறுதிச்சடங்கில் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் பங்கெடுக்கக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/xFX19