Breaking News

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த சிட்னியை சேர்ந்த Soccer பிளேயர் : திருமணமாகி மூன்றே மாதங்களில் தொற்று பாதிப்பால் உயிரிழந்த சோகம்

Sydney-based Soccer player dies of corona virus infection

சிட்னியை சேர்ந்த Aude Alaskar கொரோனா வைரஸ் பாதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

27 வயதான Aude Alaskar, Warwick Farm பகுதியில் தன் மனைவியுடன் சென்றிருந்த நிலையில் அங்கு நிலைகுலைந்து விழுந்தார். பிற்பகல் நேரத்தில் குளிப்பதற்காக சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்சை அழைத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.

ஏற்கனவே வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் 13 நாட்கள் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sydney-based Soccer player dies of corona virus infection.சிட்னியில் இதுவரை ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு உயிரிழப்புகளின் மிகவும் இளம் வயது உயிரிழப்பு இது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவரது உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் Aude Alaskar மறைவுக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர். Soccer பிளேயரான அவர் மிகவும் அமைதியான மனிதாபிமானமிக்க நண்பர் என்றும் அவருக்கு புகைப்பிடித்தல் மது உள்ளிட்ட எந்தவிதமான பழக்கங்களும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

2011ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் இருந்து புலம்பெயர் அகதியாக ஆஸ்திரேலியா வந்தவர் Aude Alaskar. மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் தன் திருமண விருந்தையும் நண்பர்களுக்கு வழங்கியுள்ளார். Aude ன் இந்த அகால மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அவரது நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்களில் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும் உடல் ஆரோக்கியத்திற்கும் வைரஸ் பாதிப்பு அதனை தொடர்ந்த உயிரிழப்பும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3xs4u6i