Breaking News

சிட்னியைச் சேர்ந்த நிழல் உலக தாதா Ibrahem Hamze மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் : குயின்ஸ்லாந்துக்கு நாடு கடத்திய போலீசார் தொடர்ந்து விசாரணை

சிட்னியின் நிழல் உலக தாதா Ibrahem Hamze மீது கொலை முயற்சி, கொலை செய்யும் நோக்கோடு துப்பாக்கிச் சூடு நடத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன. 27 வயதான Ibrahem Hamze க்கு பல்வேறு முறை புலனாய்வு போலீசார் எச்சரிக்கை விடுத்ததாகவும், அவரது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Sydney-based shadow world tycoon Ibrahem Hamze has been charged with felony criminal mischief..கோல்ட் கோஸ்ட் பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் போது Ibrahem Hamze யை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் இரவோடு இரவாக குயின்ஸ்லாந்துக்கு கொண்டு வந்தனர். மாஜிஸ்திரேட் அனுமதி வழங்கிய நிலையில் நியூ சவுத் வேல்ஸ் போலீசார் Ibrahem Hamze யை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். Bankstown காவல்நிலையத்தில் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் ஏராளமான குற்ற வழக்குகள் Ibrahem Hamze மீது பதியப்பட்டுள்ளதை உறுதி செய்தனர். மேற்கு சிட்னி பகுதியில் உடற்பயிற்சி கூடம் ஒன்றின் வெளியே பொதுவெளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் உள்ளிட்ட வழக்குகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

அந்த சம்பவத்தில் 33 வயதான நபரின் காலில் குண்டு பாய்ந்தது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததை உறுதி செய்துள்ளனர்.

Sydney-based shadow world tycoon Ibrahem Hamze has been charged with felony criminal mischief...துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ள புலனாய்வு போலீசார் கொலை செய்யும் நோக்கோடு தாக்குதல் நடத்திய Ibrahem Hamze தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததையும் உறுதி செய்துள்ளனர். ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களை ஈடுபட்ட இப்ராஹிம் மீதான புகார்கள் அனைத்தும் ஒன்றிணைத்து முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் Steve Egginton தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3r0YXDM