Breaking News

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பூங்காவில் Swooping Magpie பறவை ஒன்று தாக்கியதில் தவறி விழுந்த தாய் : கையிலிருந்த பச்சிளம் பெண் குழந்தை பலியான சோகம்

Swooping Magpie bird strikes mother in Brisbane, Australia.

மேற்கு ஹோலண்ட் பார்க் பகுதியில் உள்ள Glindemann Park-ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. விடுமுறை தினத்தை கழிப்பதற்காக அங்கு சென்றிருந்த பெண் ஒருவர் கையில் குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது Swooping Magpie பறவை ஒன்று அவரை தாக்கும் வகையில் தாழப் பறந்து வந்தது.

Swooping Magpie bird strikes mother in Brisbane, Australiaஅதனை தவிர்ப்பதற்காக ஓடியபோது தவறி விழுந்ததில் கையிலிருந்த பச்சிளம் பெண் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குயின்ஸ்லாந்து குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மிக மோசமான காயங்கள் குழந்தைக்கு ஏற்பட்டதால் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த வகை பறவைகளின் சீசன் இருக்கும் என்றும் இது போன்ற பூங்காக்கள் உள்ளிட்ட பகுதிகளில் அவர் தாழப்பறந்து மனிதர்களை தாக்க முயற்சிக்கும் என்றும் பூங்காக்களில் பல்வேறு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் விடுமுறை தினத்தை கழிப்பதற்காக சென்றிருந்த இடத்தில் நடந்த இதுபோன்ற துயரச் சம்பவம் குழந்தையின் பெற்றோரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

பல்வேறு தரப்பினரும் குழந்தையின் பெற்றோருக்கு தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். சைக்கிளிங் செல்வோர் நடைப்பயிற்சி செல்வோரை Swooping Magpie பறவை இதுபோன்று தாக்க முயற்சிப்பதாகவும் இதனால் கடந்த காலங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Link Source : https://ab.co/2VxlECJ