ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற சுனில் கண்ணா என்பவர் இந்தியாவில் தங்கியுருந்துள்ளார். இவரின் பெற்றோர் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் சுனிலின் தந்தையும், தாயும் ஏப்ரல் 29 மற்றும் ஏப்ரல் 30 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இவர்களை ஆஸ்திரேலியா அழைத்து வர சுனில் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த லிட்டில் இந்தியா தொழில் அமைப்பின் தலைவர் சஞ்சய் தேஷ்வால் , ஆஸ்திரேலியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளை புரிந்துக்கொள்ளும் அதே நேரத்தில், இது போன்ற அவசர உதவி தேவைப்படுபவர்களுக்கு சில சலுகைகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்த உடன் அந்நாட்டுடன் விமான போக்குவரத்துக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தடைவித்து உத்தரவிடடார். மேலும் தடையை மீறி ஆஸ்திரேலியா திரும்புவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்ட்து. தற்போது தடை நீக்கப்பட்டு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது.
சுமார் 80 பேர் தாயகம் அழைத்து வரப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்தியாவில் சுமார் 11000 ஆஸ்திரேலியர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை தாயகம் அழைத்து வரும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் 9000 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளதாகவும், வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Link Source: https://ab.co/3wkddap