Breaking News

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி குறித்த கூடுதல் விழிப்புணர்வு அவசியம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Study results suggest more awareness about corona vaccine in Australia.

ஆஸ்திரேலியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பான விழிப்புணர்வு எவ்வாறு உள்ளது என்ற ஆய்வு நியூ சவுத் வேல்ஸ் மாகாண சமூக சேவை குழுமம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பல்வேறு கலாச்சாரத்தை சேர்ந்தவர்களிடம் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் மக்களிடம் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

குறிப்பாக கலாச்சாரம் மற்றும் கல்வி அறிவில் வெவ்வேறு தன்மையை கொண்டிருக்கக்கூடிய மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அவசியம் என்றும், அந்த மக்களின் தலைவர்களிடம் இது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளவேண்டும் என்றும் ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

கொரோனா தடுப்பூசி குறித்த தயக்கமும் , குழப்பமும் இந்த மக்களிடம் நிலவி வருவதாக தெரியவந்துள்ளது.குறிப்பாக அஸ்ட்ராஜெனிகா போன்ற தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Study results suggest more awareness about corona vaccine in Australiaவெவ்வேறு மொழி பேசக்கூடிய பூர்வகுடி மக்களிடம் இது தொடர்பான விழிப்புணர்வு அவசியம் என்றும் சிக்கலான பல விஷயங்களை மொழி பெயர்த்து கூறினாலும் குறிப்பிட்ட மக்களை சென்றடைவது சிரமமாக உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரஸ் பரவலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 58 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

29% பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்வதா வேண்டாமா என்பது தொடர்பாக இன்னும் முடிவு முடிவெடுக்கவில்லை என்றும் ஒரு குழப்பமான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் 13 பேர் 13 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் தெரிவிக்கின்றனர்.

ஆய்வில் பங்கேற்ற சிலர், தங்களின் மருத்துவருக்கே இது தொடர்பான முழுமையான தகவல் இல்லை என்றும் அதனால் தடுப்பூசி எடுத்துக் கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Study results suggest more awareness about corona vaccine in Australia,65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயாராக இருப்பதும், 18 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டுவதும் தெரியவந்துள்ளது. 19 சதவீதம் பேருக்கு தடுப்பூசி எவ்வாறு எங்குச் எடுத்துக் கொள்வது என்பது தொடர்பான விழிப்புணர்வை இல்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெரும்பாலானவர்கள் கொரோனா தொடர்பான தகவல்களை பேஸ்புக் சமூக வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்கின்றனர் .

அதில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதற்கு தயக்கம் காட்டுவதும் தெரியவந்துள்ளது.

தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசு இன்னும் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் தடுப்பூசி குறித்த அறிவியல் பூர்வமான செய்திகளை மக்களுக்கு எளிதில் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 912 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இது வரைக்கும் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 242 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

பன்முகத்தன்மை கொண்ட ஆஸ்திரேலியாவில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடையே தடுப்பூசியை சென்று சேர்க்க , அக்கலாசாரத்தை சேர்ந்த தலைவர்களுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Link Source: https://bit.ly/3z3NmoB