Breaking News

மெல்பேர்னில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் வேன் மோதி உயிரிழந்த விபத்தில், வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Strict action has been taken against the driver of a van that crashed into a boy trying to cross the road in Melbourne.

கடந்த 2018-ம் ஆண்டு பிளாபர்ன் வடக்கு பகுதியிலுள்ள ஸ்பிரிங்ஃபீல்டு சாலையில் சிவப்பு விளக்கு எரிந்ததை அடுத்து, தனது தங்கையுடன் ஜேக் பவர் (10) என்கிற சிறுவன் சாலையை கடக்க முயன்றான். அப்போது அதே சாலையில் சிவப்பு விளக்கை மதிக்காது சென்ற வேன் ஒன்று அந்த சிறுவன் மீது மோதியது.

Strict action has been taken against the driver of a van that crashed into a boy trying to cross the road in Melbourneமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த சிறுவன் ஜேக் சிறிது நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இந்த விபத்தில் உடன் வந்த சிறுவனின் தங்கை உயிர் பிழைத்தாள். அதையடுத்து வேனை ஓட்டி விபத்தை ஏற்பட்டுத்திய ஓட்டுநர் ஜாவோ ஹூயி லு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு விக்டோரியாவிலுள்ள உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.

 

தற்போது இவ்வழக்கில் நீதிபதி அமாண்டா ஃபாக்ஸ் தீர்ப்பு கூறியுள்ளார். அதன்படி ஸ்பிரிங்ஃபீல்டு சாலை விபத்தில் ஓட்டுநர் ஜாவோ ஹூயி லு-வை குற்றவாளி என்று அறிவித்தார். மேலும் அவருக்கு சிறை தண்டனை அறிவித்த நீதிபதி அமாண்டா, 300 மணிநேரங்கள் ஊதியமில்லாமல் பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று நிபந்தையுடன் கூடிய தண்டனை வழங்கியுள்ளார்.