Breaking News

உயிரணுக்களை கொண்டு உருவாக்கப்பட்ட முப்பரிமாண காதை அரிதான குறைபாடுடன் பிறந்தவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி நிபுணர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Specialists have achieved the feat of surgically fitting a cell-born three-dimensional ear to a person born with a rare defect.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆருத்ரோ போனிலா மைக்ரோசியா என்கிற காது வளர்ச்சியை தடுக்கும் அரிய நோயுடன் பிறந்த நபருக்கு சிகிச்சை அளிக்க முயன்றார். அதற்காக மருத்துவ குழுவினரை உருவாக்கியுள்ளனர். உயிரணுக்களை கொண்டு உருவாக்கப்பட்ட முப்பரிமாண காதை நோயாளிக்கு வழங்க அவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி பாதிக்கப்பட்ட காதின் மாதிரி வடிவத்தை அவர்கள் தயாரித்தனர். காதின் குருத்தெலும்பி உயிரிகளை சேகரித்த குழுவினர், போதுமான அளவு அவற்றை வளர விட்டனர். பையோ-இங்கில் வைத்து வளர்க்கப்பட்ட அந்த உயிரிகள் காதின் வெளிப்புற வடிவத்தை பெற்றது.

அதையடுத்து 3டிபையோ தெரோப்பேடிக்ஸ் என்கிற நிறுவனம் இந்த முப்பரிமாண காதை உருவாக்கியுள்ளது. அதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட ந்பாருக்கு இந்த உயிரி காது பொருத்தப்பட்டது. இது இன்னும் சோதனை முயற்சியில் தான் உள்ளது.

தொடர்ந்து இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு மேம்படும் பட்சத்தி மைக்ரோசியா பாதிப்பை கொண்ட பலருக்கும் இது பெரும் பலனை தரும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்று மருத்துவர் ஆருத்ரோ போனிலா தெரிவித்துள்ளார்.